கவரைப்பேட்டை ரயில் விபத்து சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுர் மாவட்டம் கவரைப்பேட்டையில் நேற்றிரவு மைசூரில் இருந்து பீகாருக்கு சென்ற பாகமதி விரைவு ரயில், லூப் லைனில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 11 பெட்கள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இதில் 19 பேர் காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தண்டவாளத்தில் புரண்டு கிடக்கும் 11 பெட்களில் 8 பெட்டிகள் அகற்றப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 3 பெட்டிகளை அகற்றும் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் 350க்கும் மேற்பட்ட ரயில்வே பணியாளர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகள் இன்னும் சில மணி நேரங்களில் முடிவடையும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் அந்த வழித்தடத்தில் விரைவில் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கவரப்பேட்டை ரயில் விபத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், ஒடிசா மாநிலம் பாலாசோரில் நடந்த ரயில் விபத்து போலவே கவரப்பேட்டையிலும் விபத்து நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஏராளமான ரயில் விபத்துகள் நடந்து பல உயிர்கள் பறிபோனபோதும் மத்திய அரசு அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ள ராகுல்காந்தி, இந்த அரசு விழித்துக்கொள்ளும் முன் இன்னும் எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்பட போகிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்,.