டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரீவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெத்ரிவால் கடந்த மார்ச் 23 ஆம் தேதி மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 50 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த மே மாதம் 10 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இடைக்கால நிபந்தனை ஜாமீனை வழங்கியது.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. இதனைத்தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதை கருத்தில் கொண்டு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரீவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீனை வழங்கியுள்ளது. மேலும் பதவி விலக வேண்டுமா அல்லது முதலமைச்சராக தொடர வேண்டுமா என்ற முடிவை கெஜ்ரீவாலிடமே விட்டு விடுகிறோம் என உச்ச நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.