Homeசெய்திகள்இந்தியா"குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்கப்படும்"- கேரள காவல்துறை டி.ஜி.பி....

“குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்கப்படும்”- கேரள காவல்துறை டி.ஜி.பி. பேட்டி!

-

 

"குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்கப்படும்"- கேரள காவல்துறை டி.ஜி.பி. பேட்டி!
Photo: ANI

கேரளா மாநிலம், எர்ணாகுளம் அருகே களமச்சேரியில் கிறிஸ்தவ மத கூட்டரங்கில் மத வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அடுத்தடுத்து வெடித்த குண்டுவெடிப்பில் சுமார் 30- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கேரளாவில் குண்டுவெடிப்பு- ஒருவர் பலி!

குண்டு வெடிப்பில் படுகாயமடைந்தவர்களுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் 27- ஆம் தேதி தொடங்கிய மூன்று நாட்கள் கூட்டத்தில் 2,000- க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், “எர்ணாகுளம் குண்டு வெடிப்பு சம்பவம் துரதிருஷ்டவசமான சம்பவம்; குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, டி.ஜி.பி. சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். குண்டு வெடிப்பு சம்பவத்தை மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணைக்கு பிறகே கூடுதல் விவரங்கள் தெரிய வரும்” எனத் தெரிவித்துள்ளார்.

உம்மன் சாண்டி மறைவு- கேரளாவில் பொது விடுமுறை அறிவிப்பு!
File Photo

அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்தை ஆய்வுச் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த கேரள மாநில காவல்துறை டி.ஜி.பி. ஷேக் தர்வேஷ் சாஹேப், “கேரளாவில் மத வழிபாட்டு அரங்கில் நடந்தது குண்டுவெடிப்பு தான். களமச்சேரி குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்கப்படும்.

குண்டு வெடித்த இடத்தில் என்.ஐ.ஏ. ஆய்வு!

குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. குண்டு வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் அமைதிக் காக்க வேண்டும்; வெறுப்பு பரப்புரையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ