Homeசெய்திகள்இந்தியாடெல்லியை உலுக்கிய குண்டுவெடிப்பு: கதற வைக்கும் 'காலிஸ்தான், ஜஸ்டிஸ் லீக் இந்தியா..?

டெல்லியை உலுக்கிய குண்டுவெடிப்பு: கதற வைக்கும் ‘காலிஸ்தான், ஜஸ்டிஸ் லீக் இந்தியா..?

-

டெல்லியில் உள்ள சிஆர்பிஎப் பள்ளி வளாகம் அருகே நேற்று காலை வெடிகுண்டு வெடித்தது. இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஆதாரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வெடிகுண்டு சம்பவத்தில் தீவிரவாதிகள் சதி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ரோகினியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளிக்கு அருகே நடந்த மிகப்பெரிய வெடிவிபத்தை விசாரிக்கும் டெல்லி போலீசார், ‘ஜஸ்டிஸ் லீக் இந்தியா’ என்ற ஹேண்டில் பற்றிய தகவல்களைக் கோரி, சமூக ஊடக செயலியான டெலிகிராமை தொடர்பு கொண்டுள்ளதாக பிடிஐ தெரிவித்துள்ளது.

தடயவியல் குழு, ரோகிணியில் உள்ள பிரசாந்த் விஹாரில் உள்ள சிஆர்எஃப் பள்ளிக்கு அருகில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து மாதிரிகளை சேகரிக்கிறது.

குண்டுவெடிப்பு நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஜஸ்டிஸ் லீக் இந்தியாவின் டெலிகிராம் இடுகையின் ஸ்கிரீன் ஷாட்டில் ‘கலிஸ்தான் ஜிந்தாபாத்’என்ற வாட்டர்மார்க் கொண்ட குண்டுவெடிப்பின் கிளிப் சமூக ஊடக தளங்களில் பரவலாகப் பரப்பப்பட்டது.

“இந்திய கோழை ஏஜென்சியும், அவர்களின் எஜமானரும், எங்கள் உறுப்பினர்களைக் குறிவைத்து, நமது குரலை அடக்குவதற்காக, இழிந்த குண்டர்களை வேலைக்கு அமர்த்தலாம் என்று நினைத்தால், அவர்கள் முட்டாள்களின் உலகில் வாழ்கிறார்கள். அவர்களுடன் நாம் எவ்வளவு வலுவாக இருக்கிறோம், எந்த நேரத்திலும் தாக்கும் திறன் நம்முடையது எவ்வளவு என்பதை அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாது #KhalistanZindabad #JLI,” என்று ஜஸ்டிஸ் லீக் இந்தியா அந்த பதிவில் கிளிப்போடு கூறி இருந்தது.

குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் வெடிகுண்டை பாலித்தீன் பையில் சுற்றி ஒன்றரை அடி ஆழமுள்ள குழியில் வைத்து குப்பையால் மூடிய வீடியோக்களும் விசாரணையில் வெளியாகி உள்ளன.

சிசிடிவியில் பதிவான குண்டு வெடிப்பு, பள்ளிச் சுவரின் ஒரு பகுதியை சேதப்படுத்தியது, அருகிலுள்ள கடைகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. அங்கு நிறுத்தப்பட்ட பல கார்கள் சேதமடைந்துள்ளன. இந்த குண்டுவெடிப்பு சத்தம் பல நூறு மீட்டர் தொலைவில் இருந்து கேட்டது.

இரவு தாமதமாக காலை 7:35 முதல் 7:40 மணிக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். சமீபத்திய நாட்களாக பல விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது.


உள்ளூர்வாசியான அனிதா சிங்,‘‘கோவிலில் இருந்து திரும்பி வந்தபோது, ​​மிகவும் பலத்த வெடிப்பு சத்தம் கேட்டது. எனது வீட்டில் ஒரு சிலிண்டர் வெடித்தது போன்ற அதிர்வுகளை உணர்ந்தேன். பொதுவாக, நான் காலையில் பள்ளி வாசலில் என் குழந்தைகளுக்கான பேருந்துக்காக காத்திருப்பேன். அதிர்ஷ்டவசமாக, அது ஞாயிற்றுக்கிழமை, அதனால் யாரும் காயமடையவில்லை. இது ஒரு வார நாளில் நடந்திருந்தால் அது எவ்வளவு பேரழிவாக இருந்திருக்கும் என்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை,” என்று அதிர்ச்சி விலகாமல் கூறுகிறார்.

கமாண்டோக்கள் ரோபோக்களை பயன்படுத்தி கூடுதல் வெடிபொருட்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டின் கலவையை அறிய, சிதறியுள்ள வெள்ளை தூள், மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.

“ஒரு மூத்த போலீஸ் அதிகாரி வெள்ளைப் பொடியில் அம்மோனியம் நைட்ரேட் மற்றும் குளோரைடு கலந்திருக்கலாம் என்று கூறியுள்ளார். குற்றவாளி யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் இருக்க, ஒரு சமிக்ஞயை அனுப்பும் நோக்கத்தில் அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்ததாகத் தெரிகிறது.

MUST READ