Homeசெய்திகள்இந்தியாஆஸ்கர் விருது பெருமைகளை பாஜக அபகரித்து விடக்கூடாது - கார்கே பேச்சால் சிரிப்பலை..

ஆஸ்கர் விருது பெருமைகளை பாஜக அபகரித்து விடக்கூடாது – கார்கே பேச்சால் சிரிப்பலை..

-

ஆகஸ்ர் விருது வென்ற 2 இந்தியப் படங்களையும் பிரதமர் மோடி தான் இயக்கினார் என அந்த பெருமையையும் பாஜக அபகரித்து விடக்கூடாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். இதனால் மாநிலங்களவையில் சிரிப்பலை எழுந்தது.

அண்மையில் நடந்து முடிந்த 95வது ஆஸ்கர் விருது விழாவில் ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கும், ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ தமிழ் ஆவண குறும்படத்திற்கும் விருது வழங்கப்பட்டதற்கு , நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இரு படக்குழுவினரையும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் பாராட்டி பேசினர்.

ஆஸ்கர் விருது

அப்போது மாநிலங்களவையில் பேசிய மல்லிகார்ஜூனா கார்கே, “நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். ஆனால் எனது ஒரே ஒரு வேண்டுகோள் என்னவென்றால், ஆளும் கட்சியினர் இந்த பெருமையை அபகரித்து விடக்கூடாது. நாங்கள் தான் பாடலை எழுதினோம். மோடிஜிதான் படத்தை இயக்கினார் என்றெல்லாம் சொல்லிவிடக் கூடாது” என்று கூறினார். இதனைக்கேட்டு அவைத்தலைவர் தன்கர் , பாஜக எம்பிக்கள் உட்பட அனைத்து எம்பிக்களும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிட்டனர். முன்னதாக, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று முன்தினம் தனது சமூக வலைதள பக்கத்தில், “ஆர்ஆர்ஆர் படத்தின் கதாசிரியர் வி.விஜயேந்திர பிரசாத்தின் திறமையை முன்கூட்டி பிரதமர் மோடி அடையாளம் கண்டு அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைத்திருந்தார்” என்று பதிவிட்டிருந்தர்.

மல்லிகார்ஜுன கார்கே
ஆஸ்கர் விருது பெருமைகளை பாஜக அபகரித்து விடக்கூடாது – கார்கே பேச்சால் சிரிப்பலை..

இதனை விமர்சிக்கும் விதமாக மல்லிக்கார்ஜுன கார்கே கார்கே பேசியது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. மேலும் மாநிலங்களவையில் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், “இந்தியத் திரையுலகம் 2 ஆஸ்கர் விருதுகளை வென்றிருப்பது நாட்டிற்கு பெருமை. பிராண்ட் இந்தியா வந்துவிட்டது, இது ஒரு ஆரம்பம்தான். உலகின் கதைக்கள மையமாக இந்தியா மாறும் சாத்தியம் உள்ளது. அதற்காக நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.

MUST READ