அயோத்தியில் ராமர் பிறந்த இடம் என்று பாபர் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டினார்கள்.
அதேபோன்று மேலும் ஒரு விவகாரம் கிருஷ்ண ஜென்ம பூமி என்று மேலும் ஒரு இஸ்லாமியர்களின் வழிப்பாட்டு தளத்தை ஆய்வு செய்ய ஆணையத்தை நியமித்துள்ளது.
இது குறித்து முஸ்லிம் தரப்பினரின் மனுக்களை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
கிருஷ்ண ஜென்ம பூமி விவாகரத்தில் மதுராவில் உள்ள ஷாஹி ஈத்காவில் ஆய்வு நடத்த ஆணையரை நியமித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2023 டிசம்பர் 14ம் தேதி உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து மசூதி கமிட்டி சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு கடந்த ஜனவரி 16ம் தேதி விசாரித்தது.
இந்த விவகாரத்தில் சிவில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது அலகாபாத் உயர்நீதிமன்றம் இது போன்ற உத்தரவை பிறப்பிக்க முடியாது என மசூதி கமிட்டி சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்ற உச்ச நீதிமன்றம் மதுராவில் உள்ள ஷாஹி ஈத்காவில் ஆய்வு நடத்த வழக்கறிஞர் ஆணையரை நியமித்த அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க எதிர் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இ்ந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வரக்கு தொடர்பான முக்கிய விவகாரங்களை சுருக்கமான அறிக்கையாக தாக்கல் செய்ய இரு தரப்பினருக்கும் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்திருக்கிறது.
ஐ.பி.எஸ். அதிகாரிக்கு மிரட்டல்… மத்திய அமைச்சர் குமாரசாமி மீது வழக்குப்பதிவு!