Homeசெய்திகள்இந்தியாகுவைத் தீ விபத்து - தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 5 பேர் உயிரிழப்பு

குவைத் தீ விபத்து – தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 5 பேர் உயிரிழப்பு

-

- Advertisement -

குவைத் தீ விபத்து - தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 5 பேர் உயிரிழப்பு

குவைத் தீ விபத்து – தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரப் பூர்வ தகவல் வந்துள்ளது.

குவைத் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தில் மங்காப் நகரில் 6 மாடி கொண்ட குடியிருப்பு உள்ளது. அதில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் 195 பேர் தங்கியுள்ளனர்.

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து புலன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்!

இந்த நிலையில் கட்டிடத்தின் சமையலறையில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ கட்டிடம் முழுவதும் வேகமாக பரவியது.

அந்த விபத்தில் தமிழ்நாடு, கேரளா என்று இந்தியர்கள் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக தமிழ்நாடு, இராமநாதப்புரத்தை சேர்ந்த ராம. கருப்பண்ணன், வீராசாமி மாரியப்பன், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த முகமது ஷரீப், தஞ்சாவூரை சேர்ந்த புணாஃப் ரிச்சர்டு ராய் மற்றும் சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி ஆகிய 5 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வந்துள்ளது.

MUST READ