பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, பா.ஜ.க.வின் ஆதரவுடன் முதலமைச்சராக நிதிஷ்குமார் தொடரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பீகார் மாநில தலைவர், சிலர் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் வதந்திகளைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டினார்.
வெற்றி எனும் வார்த்தைக்கு 5,000 நாட்கள் கடந்தன… நடிகர் சாந்தனு உருக்கமான பதிவு…
முதலமைச்சர் நிதிஷ்குமாரின் மௌனத்தால் தொடர்ந்து பீகார் அரசியலில் பரபரப்பு நீடித்து வருகிறது. இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமாரை நேரில் சந்தித்த பீகார் மாநில முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் சமாதானம் செய்ய தனது கடைசி முயற்சியை மேற்கொண்டார்.
இந்த சூழலில், முதலமைச்சர் நிதிஷ்குமாரை சமாதானம் செய்யும் முயற்சி வெற்றி பெறாததை அடுத்து தனது மாற்று வியூகங்களை வகுத்தார். ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி அரசு தொடர வேண்டும் என்றால் மேலும் 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. ஐக்கிய ஜனதா தளத்தில் மொத்தம் உள்ள 45 எம்.எல்.ஏ.க்களில் 15 பேரைப் பிரித்துவிட்டால் ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பெற்றுவிடும். 15 எம்.எல்.ஏ.க்களை ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து இழுத்துவிட்டால் கட்சித் தாவல் சட்ட சிக்கலும் இருக்காது.
அன்பு மகளே… இளையராஜா உருக்கமான பதிவு…
இதையடுத்து, உடனடியாக ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்தவரும், பீகார் சட்டப்பேரவையின் சபாநாயகருமான ஆவாத் பிகாரி சவுத்ரியை சந்தித்தார் லாலு பிரசாத் யாதவ். முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை தன் பக்கம் இழுத்து இந்தியா கூட்டணியை உடைக்கும் முறியடிக்க லாலு புதிய வியூகம் வகித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா செய்தது போல ஐக்கிய ஜனதா தளத்தின் எம்.எல்.ஏ.க்கள் சிலரை ராஜினாமா செய்ய வைப்பது தான் அது.