Homeசெய்திகள்இந்தியா"லேண்டர், ரோவரில் இருந்து எந்தவித சிக்னலும் பெற முடியவில்லை"- இஸ்ரோ தகவல்!

“லேண்டர், ரோவரில் இருந்து எந்தவித சிக்னலும் பெற முடியவில்லை”- இஸ்ரோ தகவல்!

-

 

நிலவில் நிற்கும் லேண்டர்- படமெடுத்த 'பிரக்யான் ரோவர்'!
Photo: ISRO

விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எந்தவித சிக்னலும் பெற முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் முக்கிய அறிவிப்பு!

இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கியுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் மற்றும் நிலவில் தரையிறங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட பிரக்யான் ரோவரில் இருந்து எந்தவித சிக்னலும் பெற முடியவில்லை. பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்ட நிலையில், இதுவரை எந்தவித தொடர்பும் பெற முடியவில்லை. ‘Sleep Mode’ நிலையில் உள்ள விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து சிக்னல் பெற முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளது.

‘விடுதலை 2’ படத்தில் நடிக்கும் அட்டகத்தி தினேஷ்….. வெளியான புதிய தகவல்!

நிலவின் மேற்பரப்பில் 14 நாட்கள் ஆய்வுகளை மேற்கொண்ட விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ‘Sleep Mode’- க்கு சென்றது. சூரிய ஒளி படாததால் சந்திரயான்- 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உறக்க நிலைக்கு சென்ற நிலையில், இஸ்ரோ தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.

MUST READ