Homeசெய்திகள்இந்தியாஹைதராபாத்தில் சாய்ந்த 5  மாடி கட்டிடம் , இடிந்து விழும் அபாயம்

ஹைதராபாத்தில் சாய்ந்த 5  மாடி கட்டிடம் , இடிந்து விழும் அபாயம்

-

ஹைதராபாத்தில் ஐந்து அடுக்கு மாடி கட்டிடம் சாய்ந்ததால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.கட்டடத்தின் அனுமதி குறித்து அதிகாரிகள் ஆய்வு  நடத்தி வருகின்றனர்.

ஹைதராபாத்தில் சாய்ந்த 5  மாடி கட்டிடம் , இடிந்து விழும் அபாயம்

ஹைதராபாத்தில் உள்ள சித்திக் நகரில் உள்ள ஐந்து அடுக்கு மாடி கட்டிடம் சாய்ந்துள்ளது. அங்கு குடியிருந்தவர்கள் ஒடநடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். கட்டிடம் சாய்ந்ததால் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியும், அச்சமும் ஏற்பட்டது.

ஹைதராபாத் கச்சிபௌலி அருகே மாதப்பூர் எல்லையில் அமைந்துள்ள கட்டிடத்தில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளது, அதனால் கட்டிடம் இடிந்துவிடுமோ என்ற அச்சம் அங்கு வசிக்கும் மக்களுக்கு அதிகரித்துள்ளது.

அதனை அறிந்த ஹைதராபாத் பேரிடர் மற்றும் சொத்து பாதுகாப்பு முகமை அதிகாரிகள் அந்த கட்டிடத்தில் வசிப்பவர்களையும் சுற்றியுள்ள கட்டிடங்களில் உள்ளவர்களையும் வெளியேற்றியது. வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து,  மக்கள் திறந்த வெளியில் தூக்கமில்லாமல் இருந்து வருந்துள்ளனர்.

கட்டிடத்தின்  மோசமான அடித்தளம் மற்றும் மோசமான  கட்டுமானத்தின் விளைவு தான் கட்டிடம் சாய்வதற்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் அதன் அருகில் மற்றொரு புதிய கட்டிடம் கட்டப்படுவதால் இன்னும் கூடுதல் பாதிப்பு எனவும் கருதப்படுகிறது.

அந்த குடியிருப்பில் வசிக்கும் லக்ஷ்மன் என்பவர், அருகில் உள்ள கட்டிடம் கட்டும் போது, ​​வழக்கத்திற்கு மாறாக ஆழமாக மண் தோண்டப்பட்டதற்கு குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் எனவும் 450 சதுரடி பரப்பளவில் பில்டர் எப்படி இவ்வளவு ஆழமாக மண்ணை தோண்ட முடியும் என்று நாங்கள் கேட்டோம், அதற்கு  அவர்கள் அது எங்கள் கட்டிடத்திற்கு தீங்கு விளைவிக்காது என்று உறுதியளித்தனர், என்று அவர் கூறினார்.மேலும் கட்டடத்தின் அனுமதி குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

திரைப்பட விமர்சனம் என்கிற பெயரில் வன்மத்தை கக்கும் யூடியூப் சேனல்கள் – TFAPA கண்டனம்

MUST READ