திருப்பதி மலைப்பாதையில் வனத்துறையினர் வைத்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தைச் சிக்கியது.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு இந்தியக் குடியுரிமை!
கடந்த சில நாட்களுக்கு முன் அலிபிரி மலைப்பாதை வழியாக திருப்பதி கோயிலுக்கு சென்றுக் கொண்டிருந்த சிறுமி சிறுத்தைத் தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து, மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டது. அதில், கடந்த மூன்று நாட்களுக்கு முன் சிறுத்தை கூண்டில் சிக்கியது.
இந்த நிலையில், திருப்பதி மலையில் லட்சுமி நரசிம்மசாமி கோயில் அருகே வைக்கப்பட்டக் கூண்டில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது.
“கேள்வி எழுப்பும் அனைவருக்காக இந்த 5 ட்வீட்கள்”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி!
இதனிடையே, நடைப்பாதை வழியாக செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய திருப்பதி திருமலை தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக, பக்தர்களுக்கு கைத்தடி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.