Homeசெய்திகள்இந்தியாநிதிச்சேவைப் பிரிவைத் தொங்குகிறது எல்.ஐ.சி.!

நிதிச்சேவைப் பிரிவைத் தொங்குகிறது எல்.ஐ.சி.!

-

 

எல்.ஐ.சி.யின் நிகர லாபம் நான்காம் காலாண்டில் 5 மடங்கு அதிகரிப்பு!
Photo: LIC

நிதிச்சேவைப் பிரிவு ஒன்றைத் தொடங்க இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. திட்டமிட்டுள்ளது.

கைமாறிய அஜித் படம்…..அப்போ AK63 பட இயக்குனர் யார்?

‘பைவ்’ என்ற பெயரில் மின்னணு வர்த்தக மாற்றத்திற்கான, நடைமுறைத் தொடங்கப்பட்டுள்ளதாக எல்.ஐ.சி.யின் தலைவர் சித்தார்த்தா முகந்தி தெரிவித்துள்ளார். நிதிச்சேவைகளில் முகவர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு எளிதாக வழங்க, இந்த நிதிச்சேவை வசதி ஏற்படுத்தப்படவுள்ளதாகக் கூறிய அவர், இதன் மூலம் உலகதரம் வாய்ந்த மின்னணு சேவைகளை எல்.ஐ.சி. வழங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்கள் எல்.ஐ.சி. அலுவலகங்களை நாடி வரத்தேவையின்றி, பாலிஸி ரீதியிலான கடன் மற்றும் பாலிஸி சேவைகள் ஒரு பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் பெறச் செய்வதே, இதன் நோக்கம் என்றும் சித்தார்த்தா முகந்தி தெரிவித்துள்ளார். இதை தவிர, நிதிச்சேவைகளை வழங்குவதற்கான புதிய விரிவையும் எல்.ஐ.சி. தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறிய அவர், டிசம்பர் முதல் வாரத்தில் சந்தையின் தற்போதைய நிலவரத்துக்கு ஏற்ப, புதிய திட்டம் ஒன்றை அறிவிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தளபதி 68 படத்தில் இணையும் லவ் டுடே பட நடிகை!

பாலிஸிதாரர்கள் மற்றும் முகவர்கள் நலனுக்காக புதிய திட்டத்தில் எளிதாகக் கடன் பெறும் வசதி மற்றும் முன்கூட்டியே பாலிஸியை முடித்துக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யவும் எல்.ஐ.சி. திட்டமிட்டுள்ளது.

MUST READ