வங்கிகளில் கடன் பெற்றவர்கள் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாததற்கான காரணங்களைக் கண்டறிந்து, ஆறு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
பாட்டிலில் பால் விற்பனை- கைவிரித்த ஆவின்!
வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்காக ஏற்கனவே, உள்ள வழிகாட்டுதல்களையும் மாற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, 25 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றவர்கள் திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் பட்சத்தில், அதற்கான காரணங்களை கடன் வழங்கியவர்கள் ஆராய வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிலையில், ஆறு மாதங்களில் அதை வாரா கடன் என அறிவித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ரிசர்வ் வங்கித் தெரிவித்துள்ளது. தொடர்ந்து கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி பணத்தைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்திய காதலன்!
அப்படியானாலும், வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் பட்டியலில் அவர்களின் ஓராண்டு வரை இருக்கும் என்றும், அவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை தொழில் தொடங்க, கடன் வழங்கப்படாது எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.