Homeசெய்திகள்இந்தியாபிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு மேல் பறந்த ட்ரோன்?

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு மேல் பறந்த ட்ரோன்?

-

- Advertisement -

 

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு மேல் பறந்த ட்ரோன்?
Photo: ANI

டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தின் மேல் ட்ரோன் போன்ற மர்மப்பொருள் பறந்ததாகக் கூறப்படும் நிலையில், இது குறித்து டெல்லி மாநில காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேனா நினைவுச் சின்னம்- வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க் (Lok Kalyan Marg) பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ அரசு இல்லம் அமைந்துள்ளது. உச்சபட்சப் பாதுகாப்புக்கு கொண்ட பிரதமரின் இல்லத்திற்கு மேல் இன்று (ஜூலை 03) அதிகாலையில் ட்ரோன் போன்ற பொருட்கள் பறந்ததாகக் கூறப்பட்டது.

இது தொடர்பாக, பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில், டெல்லி காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் சந்தேகத்திற்குரியப் பொருட்கள் ஏதேனும் உள்ளனவா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதற்கான தடயங்கள் எதுவும் சிக்கவில்லை. அதேசமயம், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் கண்காணிப்பிலும் ட்ரோன் எதுவும் பறந்ததற்கான அடையாளங்கள் கண்டறியப்படவில்லை.

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!

விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டப் பகுதியில் ட்ரோன் பறந்ததாகக் கூறப்படும் நிலையில், அங்கு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

MUST READ