ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தல்… 98 தொகுதிகளில் தெலுங்கு தேசம் முன்னிலை…
18-வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில மாநிலங்களில் இடைத்தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டது. ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆந்திர பிரதேசத்தில் ஆளுங்கட்சியான ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. எதிர்க்கட்சியான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 98 இடங்களில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.