Homeசெய்திகள்இந்தியாசமையல் எரிவாயு இறக்குமதி அதிகரிப்பு!

சமையல் எரிவாயு இறக்குமதி அதிகரிப்பு!

-

- Advertisement -

 

Gas-Cylinder

தேவை அதிகரிப்பின் காரணமாக, எல்.பி.ஜி. எனப்படும் சமையல் எரிவாயு இறக்குமதி 5 ஆண்டுகளில் 60% அதிகரித்திருப்பதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

அரசியலில் விஜய்யுடன் நிற்க தயார்… பிரபல நடிகர் நெகிழ்ச்சி…

கடந்த 2022- 2023 ஆம் நிதியாண்டில் 1 கோடியே 83 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு சமையல் எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதுவே, கடந்த 2017- 2018 ஆம் நிதியாண்டில் 1 கோடியே 14 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கே சமையல் எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டிருந்ததாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐந்து ஆண்டுகளில் உள்நாட்டில் சமையல் எரிவாயு உற்பத்தி 4% அதிகரித்த நிலையிலும், நுகர்வு 22% அதிகரித்துள்ளதால் இறக்குமதி உயர்ந்துள்ளது. இதற்கு மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தால் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

கௌதம் மேனனின் ஜோஷ்வா… வெளியீட்டு தேதி அறிவிப்பு…

சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்து, 32 கோடி பேராக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ