மத்திய பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே கடும் இழுபறி நீடிக்கலாம் என கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
சஸ்பென்ஸ் திரில்லரில் ஹரிஷ் கல்யாண்….. வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
வரும் நவம்பர் மாதம், மத்திய பிரதேசம் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக, abp மற்றும் CVOTERS இணைந்து கருத்துக் கணிப்பை நடத்தினர். அதில், 37 விழுக்காட்டினர் தற்போதைய முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல், 36 விழுக்காட்டினர் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்துக்கு ஆதரவாகவும், 17 விழுக்காட்டினர் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியாவுக்கும் ஆதரவு தெரிவித்திருந்தது கருத்துக் கணிப்பு மூலம் தெரிய வந்தது.
லக்ஷ்மி ராமகிருஷ்ணன், சமுத்திரகனி கூட்டணியில் ‘ஆர் யூ ஓகே பேபி’….. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
இதனால் சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க., காங்கிரஸ் இடையே கடும் இழுபறி நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.