Homeசெய்திகள்இந்தியாதாம்பத்ய உறவுக்கு மனைவி அனுமதிக்கவில்லை என்றால் விவாகரத்து பெறலாம் - நீதிமன்றம் அதிரடி!

தாம்பத்ய உறவுக்கு மனைவி அனுமதிக்கவில்லை என்றால் விவாகரத்து பெறலாம் – நீதிமன்றம் அதிரடி!

-

தாம்பத்ய உறவுக்கு மனைவி அனுமதிக்கவில்லை என்றால் கணவர் விவாகரத்து பெறலாம் என மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், மனைவி தாம்பத்ய உறவுக்கு அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன் பலமுறை வற்புறுத்தியும் அவர் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த கணவர் மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார். மேலும் இது தொடர்பாக அம்மாநிலத்தில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் கணவருக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனை எதிர்த்து மனைவி மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் விவாகரத்தை உறுதி செய்தார். தாம்பத்ய உறவுக்கு மனைவி அனுமதிக்காததும் இந்து திருமணச் சட்டப்படி கொடுமையே என கூறி கணவருக்கு மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது. மனைவி தாம்பத்ய உறவுக்கு அனுமதிக்கவில்லை என கணவர் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

MUST READ