சென்னை நுங்கம்பாக்கதில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அஸ்வின் மற்றும் பத்திரிக்கையாளர் சித்தார்த் எழுதிய “ I HAVE THE STREETS “ குட்டி ஸ்டோரி புத்தகத்தை அஸ்வினே வெளியிட்டுள்ளார்.இந்த புத்தகத்தை நான்கு ஆண்டுகள் முயற்சிக்கு பின் எழுதி முடிந்ததாக கூறினார். அஸ்வினின் சுயசரிதை புத்தகமாக இல்லாமல் அவருடைய கிரிக்கெட் தொடர்பான அனுபவங்களை குட்டி ஸ்டோரியாக இதில் எழுதியுள்ளார்.
இந்த புத்தகத்திற்கு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் முன்னுரை எழுதியுள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் மெட்ராஸ், தமிழ்நாடு தொடர்ந்து இந்தியாவிலிருந்தே தனியாகவே இருக்கிறது. இந்திய அணி ஒன்றும் வானத்தைப்போல படம் மாதிரி அல்ல, ஒவ்வொரு முறையும் மெட்ராஸ் தனிமைப்படுத்தப்படுவதை நான் உணர்ந்துள்ளேன்.
இந்திய அணியில் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல என உரையை தொடங்கினார். புத்தக வெளியீடு நிகழ்ச்சியில் தான் இந்திய அணிக்கு தேர்வான சமயத்தில் ஹிந்தி தெரியாமல் பட்ட கஷ்டங்களை பகிர்ந்துள்ளார். ஹிந்தி தெரியாது போடா அப்படினு சொல்லலாம். ஆனால் டேய் ஹிந்தியே தெரியல என்னாடா அப்படினு சொல்லலாம் என ஹிந்தியின் முக்கியத்துவத்தை சூசகமாக தெரிவித்தார்.அத்துடன் தோனியின் விக்கெட்டை வீழ்த்துவதே இலட்சியமாக வைத்திருந்ததையும், ஃபேஸ் புக் வாயிலாக உலகக் கோப்பைக்கு தேர்வானதை தோனி கூறியதையும் நினைவுகூர்ந்தார். எனது அப்பா என்னை பேட்ஸ்மேனாகத்தான் உருவாக்க நினைத்தார் ஆனால் நான் ஆஃப் ஸ்பின்னர், பேட்ஸ்மேன் கிடையாது என்று அப்பாவிடம் திட்டவட்டமாக கூறியதையும் எடுத்துரைத்தார்.
மேலும் அது தான் என்னுடைய வாழ்க்கையை மாற்றிய தருணம் என்றும் தான் ஆஃப் ஸ்பின்னரான கதையை விவரித்துள்ளார். ராமகிருஷ்ணபுரம் தெருவில் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் என்னால் மறக்கவே முடியாத நிகழ்வு என்றும் 2016 வரை தெருவில் கிரிக்கெட் விளையாடினேன் எனவும் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.