Homeசெய்திகள்இந்தியாமதரசா இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு....வன்முறையாளர்களைக் கண்டதும் சுடுவதற்கு உத்தரவு..!

மதரசா இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு….வன்முறையாளர்களைக் கண்டதும் சுடுவதற்கு உத்தரவு..!

-

 

மதரசா இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு....வன்முறையாளர்களைக் கண்டதும் சுடுவதற்கு உத்தரவு..!
Photo: PTI

உத்தரகாண்ட் மாநிலத்தில் மதரசா பள்ளி இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

பஞ்சு மிட்டாயில் நஞ்சு……மக்களே உஷார்!

உத்தரகாண்ட் மாநிலம், ஹால்த்வாணி (Haldwani) மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் அருகே உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்டதாகக் கூறி மதரசா பள்ளியை நகராட்சி நிர்வாகத்தினர் இடித்துள்ளனர். இது அப்பகுதியில் வாழும் இஸ்லாமியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இஸ்லாமியர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மீது அவர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அந்த கும்பல் காவல் நிலையத்தைச் சேதப்படுத்தியதுடன், வாகனங்களுக்கும் தீ வைத்திருக்கிறார்கள். வன்முறைக் காரணமாக, பதற்றம் நிலவுவதால் கூடுதல் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

எம்.ஜி.ஆரை விமர்சித்த ஆ.ராசாவை கண்டித்து அதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

வன்முறையில், காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் உட்பட 50- க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர இணையதள சேவை முடக்கப்பட்டதுடன், வன்முறையாளர்களைக் கண்டதும் சுடுவதற்கு உத்தரகாண்ட் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், அந்த மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

MUST READ