Homeசெய்திகள்இந்தியாமகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்தது-25 பேர் பலி

மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்தது-25 பேர் பலி

-

- Advertisement -

மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்தது-25 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானாவில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புல்தானாவில் உள்ள சம்ருத்தி மஹாமார்க் விரைவுச் சாலையில் 32 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 25 பேர் இறந்திருக்கலாம் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.  (புகைப்படம்: ஏஎன்ஐ)

சம்ருதி மகாமார்க் விரைவு சாலையில் 32 பேருடன் இன்று அதிகாலை பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. திடீரென பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், 25 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பேருந்தில் இருந்து கருகிய நிலையில் எடுக்கப்பட்டன. மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். காயமடைந்தவர்கள் புல்தானா சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

Maharashtra 25 people charred to death as bus catches fire

விபத்துகுறித்து புல்தானா எஸ்பி கூறுகையில், “நாக்பூரிலிருந்து புனே நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து அதிகாலை 1:30 மணியளவில் விபத்துக்குள்ளானது. டயர் வெடித்ததால் பேருந்தில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதாக டிரைவர் கூறினார். அப்போது காரின் டீசல் டேங்க் தீப்பிடித்து எரிந்தது. இறந்தவர்களில் 3 குழந்தைகள் உள்ளனர், மீதமுள்ளவர்கள் பெரியவர்கள். விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை” என்றார்.

MUST READ