
மகாராஷ்டிரா மாநிலத்தில் பேருந்து தீ விபத்து எரிந்த விபத்தில், பயணிகள் 25 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
49ஆவது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றார்!
மகாராஷ்டிரா மாநிலம், யாவத்மால் நகரத்தில் இருந்து புனேவுக்கு 32 பயணிகளுடன் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. புல்தானா அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்தது.
இந்த பேருந்து முழுவதும் மளமளவென தீ பரவியது. இந்த விபத்தில் 25 பயணிகள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், மீட்புப்படை மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் படுகாயமடைந்த எட்டு பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து நேரில் ஆய்வு செய்த காவல்துறை உயரதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு அமல்!
நள்ளிரவு 01.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்ட போது, பயணிகள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்ததாகவும், அதுவே உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என்றும் தகவல் கூறுகின்றனர். சம்ருத்தி மஹாமார்க் விரைவுச் சாலையில் (Samruddhi Mahamarg Expressway) இந்த விபத்து ஏற்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.