Homeசெய்திகள்இந்தியாமகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதியானது!

மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதியானது!

-

- Advertisement -

 

மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதியானது!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீடு இறுதியானது.

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள் – ஈபிஎஸ்

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் மாநில மற்றும் தேசிய கட்சிகளின் தலைவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீடு இறுதியானது. மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் பிரிவு 10 தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

விசிக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள்..!

அதேபோல், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பிரிவு 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தகவலை சரத்பவார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

MUST READ