Homeசெய்திகள்இந்தியாமகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்... தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ் கூட்டணி!

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்… தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ் கூட்டணி!

-

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு ரூ.3,000 மாதாந்திர ஊக்கத்தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பன உள்ளிட்ட 5 முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக
வரும் 20-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி, மற்றும் காங்கிரஸ் – உத்தவ் தாக்கரே சிவசேனா – சரத்வார் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் அறிக்கையை இன்று அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டார். இந்நிகழ்வில், மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், சுப்ரியா சுலே, சஞ்சய் ராவத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல் விலையை குறைக்காதது ஏன் : கார்கே கேள்வி

இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில், முக்கிய 5 அறிவிப்புகளாக பெண்களுக்கு மாதம் ரூ.3,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், சமூக – பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.3 லட்சம் வரையிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மகாராஷ்டிராவில் வேலையில்லாத ஒவ்வொறு இளைஞருக்கும் மாதம் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு குடும்பமும் ரூ.25 லட்சம் மதிப்பிலான சுகாதாரக் காப்பீட்டுத் தொகை பெறும் என்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

MUST READ