மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தையின் தலை பாத்திரத்திற்கு மாட்டிக்கொண்ட நிலையில், வனத்துறையினர் அந்த சிறுத்தையை மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று இரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது. அங்குள்ள மாட்டு தொழுவம் ஒன்றிற்குள் புகுந்த அந்த சிறுத்தை தண்ணீர் அருந்துவதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த பாத்திரத்திற்குள் தலையை விட்டுள்ளது. இந்த நிலையில், அந்த சிறுத்தையின் தலை அந்த பாத்திரத்திற்குள் மாட்டிக்கொண்டது. இதனையடுத்து அந்த சிறுத்தை அங்கிருந்து நகர முடியாமல் தவித்துள்ளது. இதனை பார்த்த மாட்டு தொழுவத்தின் உரிமையாளர் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அந்த சிறுத்தையின் நான்கு கால்களையும் கட்டி சிறுத்தையின் தலையை அந்த பாத்திரத்திற்குள் இருந்து விடுவித்தனர். இதனை தொடர்ந்து அந்த சிறுத்தை கூண்டிற்குள் வைத்து அடைக்கப்பட்டு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை பாத்திரத்திற்குள் மாட்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.