சட்டீஸ்கர் மாநில பத்திரிகையாளர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை ஐதாராபாத்தில் கைது செய்த தனிப்படை போலீசார்.
சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த முகேஷ் சந்திரகர் ஒரு முன்னணி செய்தி நிறுவனம் மற்றும் பிற செய்தி சேனல்களில் நிருபராக பணியாற்றி வந்தார். மேலும் பஸ்தர் ஜங்ஷன் என்ற யூடியூப் சேனலையும் நடத்தி வந்தார். இந்த யூடியூப் சேனலுக்கு 1,59,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கொண்டுள்ளது. 2021 ஆண்டு ஏப்ரலில் மாவோயிஸ்ட் கட்டுப்பாட்டில் இருந்த கோப்ரா கமாண்டோ ராகேஷ்வர் சிங் மன்ஹாஸை விடுவிப்பதில் பத்திரிக்கையாளர் முகேஷ் சந்திரகர் முக்கிய பங்கு வகித்தார்.
இதற்கிடையில், ஜனவரி 1-ம் தேதி முகேஷ் சந்திரகர் (33) காணாமல் போனார். இதனையடுத்து பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் முகேஷ் காணாமல் போன 24 மணி நேரத்திற்குப் பிறகு ஜனவரி 2 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு கோட்வாலி காவல் நிலையத்தில் முகேஷின் சகோதரர் யுகேஷ் சந்திரகர் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்கை மேலும் விசாரிக்க பிஜாப்பூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் கீழ் சிறப்பு புலனாய்வுக் குழுவை (எச்.ஐ.டி. ) போலீசாரின் தனிப்படையை கடந்த சனிக்கிழமை அமைத்தனர். இதில் தனிப்படை போலீசார் சத்தீஸ்கர் பத்திரிக்கையாளர் கொலைக்கு பிஜப்பூரில் சாலை அமைக்கும் பணிகளில் நடந்த ஊழல்களை செய்தியாக வெளியிட்டதே காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரனை நடத்தினர்.
சத்தீஸ்கர் பத்திரிக்கையாளர் கொலைக்கு பிஜப்பூரில் சாலை அமைக்கும் பணிகளில் நடந்த ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் முகேஷ் செய்தி வெளியிட்டு இருந்தார். டிசம்பர் 25ஆம் தேதி வெளியான செய்தியின் அடிப்படையில் பொதுப்பணித்துறை விசாரணையைத் தொடங்கியது.
இதுகுறித்து சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மாவும் இதே விஷயத்தில் சந்தேகம் தெரிவித்திருந்தார். இதனால் முகேஷ் கொலைக்கு ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகர் தனது பணியில் தலையிடுவதாக அவரது சகோதரர் ரித்தேஷ் சந்திரகருக்கும், முகேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து போலீசார் முகேஷ் சடலத்தை ஜனவரி 3-ம் தேதி சாத்தான் பாரா பகுதியில் உள்ள ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகர் வீட்டு வளாகத்தில் புதிதாக மூடப்பட்ட கழிவுநீர் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது.
அதில் முகேஷ் சந்திரகரின் தலை, முதுகு, வயிறு மற்றும் மார்புப் பகுதிகளில் பலத்த காயங்கள் இருந்ததாக உடற்கூறு ஆய்வு அறிக்கையில் போலீசார் தெரிந்து கொண்டனர். எனவே முகேஷ் சந்திரகர் கொலைக்கு முன்பு கடுமையாக தாக்கி கொடுமைப்படுத்தப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர். இதனையடுத்து சுரேஷ் சந்திரகரின் சகோதரர் ரித்தேஷ் சந்திரகர், மேற்பார்வையாளர் மகேந்திர ராம்தேகே மற்றும் தினேஷ் சந்திரகர் ஆகியோரை போலீசார் ஏற்கனவே கைது செய்த நிலையில் சுரேஷ் சந்திரகரை கண்டுபிடிக்க போலீசார் 200 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
300 மொபைல் எண்கள் கண்காணிப்பில் வைத்து சுரேஷின் மனைவியிடம் விசாரணை நடத்தியதோடு, அவரது வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. இந்நிலையில் சுரேஷ் சந்திராகர் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனது ஓட்டுநர் வீட்டில் பதுங்கியிரப்பதை அறிந்த சட்டீஸ்கர் தனிப்படை போலீசார் அவரை ஞாயிற்றுக்கிழமை ஐதராபாத் வந்து திங்கட்கிழமை அதிகாலையில் சுரேஷ் சந்திராகரை போலீஸார் கைது செய்தனர்.
மறுபுறம், சத்தீஸ்கர் பத்திரிகையாளர் படுகொலை அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலைக்கு காரணமாக சுரேஷ் சந்திராகர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் எனக்கூறி வந்த நிலையில் இதற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தகவல் தொடர்பு துறையின் தலைவர் சுஷில் ஆனந்த் சுக்லா மறுத்துள்ளார். சுரேஷ் சந்திரகர் சில ஆண்டுக்கு முன்பு பாஜகவில் முன்னாள் மாவட்டத் தலைவர் ஜி.வெங்கட் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்ததாக தெரிவித்துள்ளாா்.
பஞ்சாப் விவசாய சங்க தலைவருடன் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பேச்சுவார்த்தை