Homeசெய்திகள்இந்தியாபெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி - 5 பேர் கைது

பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி – 5 பேர் கைது

-

- Advertisement -
kadalkanni

பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி – 5 பேர் கைது

பெங்களூருவில் குண்டு வெடிப்பு நடத்த திட்டமிட்டுருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Major terror module busted in Bengaluru, 5 suspects arrested - Major terror  module busted in Bengaluru, 5 suspects arrested -

பெங்களூருவில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அதன்படி, சையது சொஹைல், உமர், ஜூனைத், முடாசிர், ஜாஹித் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தீவிரவாதிகளா என பெங்களூரு குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். 2017 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் இந்த 5 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 5 பேரும் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்தபோது தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற இரண்டாவது கூட்டம், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தி.மு.க., காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி, ம.தி.மு.க., கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, வி.சி.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.இந்த சூழலில் தீவிரவாத தாக்குதல் சதித்திட்டம் தீட்ட திட்டமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ