Homeசெய்திகள்இந்தியாபிரதமர் பதவியில் இருப்பவர் நீதித்துறை குறித்து கருத்து சொல்வது முறையல்ல - மல்லிகார்ஜீன கார்கே!

பிரதமர் பதவியில் இருப்பவர் நீதித்துறை குறித்து கருத்து சொல்வது முறையல்ல – மல்லிகார்ஜீன கார்கே!

-

- Advertisement -

ஒரு பிரதமர் பதவியில் இருப்பவர் நீதித்துறை குறித்து கருத்து சொல்வது முறையல்ல என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜீன கார்கே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களே, ஒரு பிரதமர் பதவியில் இருப்பவர் நீதித்துறை குறித்து கருத்து சொல்வது முறையல்ல. ஆனால் உங்களுக்கு அது தெரியாது என்பது இதன் மூலம் விளங்குகிறது. இருந்தாலும், இந்தியாவின் தன்னாட்சி பெற்ற அமைப்புகளை நீங்கள் உங்கள் சொத்தாக நினைத்துக் கொண்டிருப்பதால், உங்களிடம் சில கேள்விகள் கேட்கவேண்டும். உங்கள் ஆட்சி ‘ஜனநாயகத்தை அழிக்கிறது’ என்று எச்சரிப்பதற்காக 4 மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சேர்ந்து முன்னெப்போதும் இல்லாத வகையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தியது ஏன்? அதில் ஒரு நீதிபதியை உங்கள் பாஜக அரசு, ராஜ்ய சபா உறுப்பினராக நியமித்தது ஏன்? 2024 லோக் சபா தேர்தலில், ஒரு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியை மேற்கு வங்கத்தில் உங்கள் கட்சி வேட்பாளராக நிறுத்தியிருப்பது ஏன்?

மரியாதைக்குரிய உச்சநீதிமன்றத்தால் சட்டவிரோதமென தீர்ப்பளிக்கப்பட்ட தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை நீங்கள் கொண்டு வந்தது ஏன்? திரு மோடி அவர்களே, இந்தியாவின் அமைப்புகள் இந்திய மக்களின் சொத்து அவற்றின் அதிகாரத்தைப் பறித்து, நாட்டை பலவீனப்படுத்தியதில் உங்களுக்கு பெரும்பங்கு இருக்கிறது. இந்த அமைப்புகளை உருவாக்கவும், வளர்த்தெடுக்கவும் காங்கிரஸ் கட்சி பணியாற்றியிருக்கிறது. இவற்றுக்காக ஆயிரக்கணக்கான தலைவர்களும் தொண்டர்களும் தங்கள் உயிரை அர்ப்பணித்திருக்கிறார்கள். இந்த நாட்டின் அமைப்புகளை உங்களிடம் இருந்து மீட்டெடுத்து, இந்த நாட்டு மக்களிடமே நாங்கள் திருப்பிக் கொடுப்போம். எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

MUST READ