நடனமாடிக் கொண்டிருந்தபோது மயங்கிவிழுந்து 26 வயது இளைஞர் பலி
ஆந்திராவில் விநாயகர் சதுர்த்தியையொடி மண்டபத்தில் வைக்கப்பட்ட இடத்தில் நண்பர்களுடன் டான்ஸ் ஆடி கொண்டே சுருண்டு விழுந்து உயிரிழந்த 26 வயது இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
நவீன மருத்துவ தொழில்நுட்பம் வந்த பிறகு அனைத்து நோய்களும் குணமாகி வருகின்றன. ஆனால் இது ஒரு சிலருக்கு மட்டும்தான். மறுபுறம் வயது வித்தியாசம் இன்றி இளம் வயதிலேயே இதய செயலிழப்பால் பலர் இறக்கின்றனர். இரவில் தூங்குபவர் சீக்கிரம் எழுந்திருப்பாரா இல்லையா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம் அனைத்து உணவு பொருட்களிலும் கலப்படம், துரித உணவு பழக்கம், நேரம் தவரிய உணவு உட்கொள்ளுதல், சரியான தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற காரணங்களினால் மரணம் எப்போது நிகழும் என்று யாருக்கும் தெரியாத நிலை உள்ளது. மறுபுறம் ஆடி, பாடி கொண்டு மகிழ்ந்தவர்கள் அதே இடத்தில் சுருண்டு விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் சமீப காலமாக நடந்து வருகிறது.
அவ்வாறு ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் தர்மவரம் மண்டலம் மாருதி நகர் பகுதியில் விநாயக மண்டபம் அமைத்து அதில் விநாயகர் சிலை வைத்து கடந்த மூன்று தினங்களாக அப்பகுதி மக்கள் பூஜை செய்து வந்தனர். நேற்று இரவு இந்த விநாயகர் மண்டபம் முன்பு சில சினிமா பாடலுக்கு இளைஞர்கள் நடனமாடினர். அப்பகுதி மக்கள் அவர்களை கைகளை தட்டி உற்சாகப்படுத்தி வந்தனர்.இதில் 26 வயதான பிரசாத் என்ற இளைஞர் நடனம் ஆடி கொண்டே சுருண்டு விழுந்தார். உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பிரசாதை பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். உற்சாகமாக நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் உயிரிழந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.