Homeசெய்திகள்இந்தியாதேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய தெலுங்கு தேசம் கட்சி!

தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய தெலுங்கு தேசம் கட்சி!

-

 

தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய தெலுங்கு தேசம் கட்சி!
File Photo

ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், தெலுங்கு தேசம் கட்சி, இப்போதே தனது தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.

வயலில் தரையிறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர்

அதன்படி, தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திர மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை , அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 3,000 உதவித்தொகை, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 20,000 வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

மேலும், வரும் சட்டமன்றப் பொதுத்தேர்தலே தான் போட்டியிடும் கடைசித் தேர்தல் என்று முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

வருகிற 2024- ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலும் நடைபெறவுள்ளது.

தேர்தல் வியூகம் குறித்து ஜூன் 12- ஆம் தேதி எதிர்க்கட்சிகள் ஆலோசனை!

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கூட்டணி அல்லாத, மாநில கட்சிகள், தேசிய கட்சிகளை ஒன்றிணைத்து மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வருகிறார். எனினும், அவர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பின்னடைவாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ