Homeசெய்திகள்இந்தியாமணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரமாரி கேள்வி!

மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரமாரி கேள்வி!

-

 

ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு!
File Photo

மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்களுக்கு நடந்த கொடூரம் குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், முதல் தகவல் அறிக்கையைப் பதிவுச் செய்ய தாமதம் ஏன்? என்பது உள்ளிட்ட சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.

ப்ரீ ரிலீஸ் பிசினஸில் 150 கோடி ரூபாயை தட்டி தூக்கிய கார்த்தியின் படங்கள்!

மணிப்பூர் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரிக்கப்பட்டன. வாதங்களின் போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நிகழ்ந்த வன்கொடுமை போல, பல பெண்களுக்கு நடந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் புகார் அளிக்காமல் இருப்பதாகவும், மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடூரத்தை பரந்த கண்ணோட்டத்தில் விசாரிக்க வேண்டும் என்றும் கூறினார். பாதிக்கப்பட்ட மனுதாரர்களுக்கான நீதியை தாங்கள் வழங்குவோம் என்றும் தலைமை நீதிபதி உறுதியளித்தார்.

இரண்டு பெண்கள் அவமானப்படுத்தப்பட்டு, பல வாரங்கள் கழிந்த பிறகே, மிகவும் தாமதமாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது ஏன்? இவ்வளவு மோசமான செயல் நடந்த போதும், காவல்துறையினருக்கு ஒரு தகவலும் கிடைக்காமல் போனது எப்படி? என்று தலைமை நீதிபதி, அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

மணிப்பூரில் வன்முறைக் கட்டுக்கடங்காமல் போனதால், நிலைமையை உடனடியாக சீர் செய்ய வேண்டியது அவசியம். மணிப்பூரில் வன்முறைக்கு காரணமான குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டியுள்ளது என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மணிப்பூரில் நடவடிக்கைகளுக்கு மூன்று மாதங்களாவது தேவைப்படும். என்று வாதிட்டார்.

மூன்று காதல் கதைகள்……..விக்ரம் பிரபுவின் இறுகப்பற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

அதற்கு தலைமை நீதிபதி, மூன்று மாத அளவிற்கு நேரமில்லை; ஏற்கனவே சாட்சியங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. சரியான நேரத்தில் வாக்குமூலங்களைப் பதிவு செய்யவில்லை என்றால் விசாரணை சிரமமாகிவிடும் என்று கவலையை வெளிப்படுத்தினார்.

மணிப்பூர் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக் கோரிய மற்றொரு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை மட்டும் கடுமையாகக் குறைக்கூறுவது போல, மனு இருப்பதாகக் கூறி, அந்த மனுவை விசாரிப்பது கடினம் என்று கூறி தள்ளுபடி செய்தது.

MUST READ