மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. ஆங்காங்கே வன்முறைகளும், தீவைக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றனர். இந்த கலவரத்தில் மட்டும் 90- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புப் படையினர், மணிப்பூர் மாநில காவல்துறையினர் உள்ளிட்டோர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விலங்கு… மீண்டும் புதிய வெப் சீரிஸ் நடிக்கும் விமல்!
இந்த நிலையில், காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட 10 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், மணிப்பூர் கலவரம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.
ஆதிபுருஷ் படத்தை உடனே தடை செய்க! மோடிக்கு கடிதம்
அந்த கடிதத்தில், “அனைத்து சமுதாய மக்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தலையிட வேண்டும். மணிப்பூரில் தனி நிர்வாகம் நடத்துவதை எதிர்ப்பதாகவும், அனைத்து தரப்பினருடனும், பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதம் தாங்கிய குழுவினரிடம் இருந்து உடனடியாக ஆயுதங்கள் அனைத்தையும் பெற வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.