நாட்டின் 77-வது சுதந்திர தினத்தையொட்டி, இன்று (ஆகஸ்ட் 15) காலை 07.30 மணிக்கு டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.
தொடங்கும் பண்டிகைக் காலம்…. மாருதி சுசுகி நிறுவனத்தின் எதிர்பார்ப்பு!
அதைத் தொடர்ந்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவின் 140 கோடி மக்கள் எனது குடும்பத்தினர். சுதந்திரப் போராட்டத்திற்காக உயிர் துறந்த நம் தியாகிகளை நினைவுக்கூர்ந்து மரியாதைச் செலுத்துகிறேன். தேசத்தை மிக வலுவுடன் கட்டமைக்கும் பணிகளில் தான் நமது கவனம் இருந்து வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்பும்.
மணிப்பூர் மாநில மக்களுடன் நாம் அனைவரும் இருக்கிறோம். மணிப்பூரில் அமைதியைக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு வருகிறது. மணிப்பூர் மாநில வன்முறைக்கு அமைதியான முறையில் தீர்வுக் காணப்படும். மணிப்பூரில் அண்மை நாட்களாக சூழல் கட்டுக்குள் இருக்கிறது. தேசத்தை மிக வலுவுடன் கட்டமைக்கும் பணிகளில் தான் நமது கவனம் இருந்து வருகிறது.
செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி!
இந்தியா தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. வெளிநாட்டினர் இந்தியாவிற்குள் புகுந்ததுடன் நமது வளங்களையும் கொள்ளையடித்தனர். தற்போது நாம் எடுத்து வரும் நடவடிக்கைகள் அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு தாக்கம் நிறைந்ததாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.