முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் இன்றுடன் (ஏப்ரல் 03) நிறைவுப் பெறுகிறது. அவருடன் 54 மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று (ஏப்ரல் 03) ஓய்வுப் பெறுகின்றனர்.
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!
மன்மோகன் சிங் கடந்த 1991- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சியின் போது, அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வுச் செய்யப்பட்டார். நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராகப் பதவி வகித்தார். பின்னர் 2004- ஆம் ஆண்டில் இருந்து 2014- ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்தார்.
கடந்த 2019- ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு சென்ற அவரின் பதவிக்காலம் இன்றுடன் (ஏப்ரல் 03) முடிவடைகிறது. மன்மோகன் சிங்கின் ஓய்வைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் காலியாகும் ராஜஸ்தான் மாநிலத்துக்கான உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பொறுப்பேற்கிறார்.
தேர்தல் அதிகாரியை மிரட்டிய புகாரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு!
சோனியா காந்தி முதன் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு செல்கிறார். மன்மோகன் சிங் தவிர 9 மத்திய அமைச்சர்கள் மற்றும் 54 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றுடன் ஓய்வுப் பெறுகின்றனர்.