Homeசெய்திகள்இந்தியாமராட்டியத்தில் நிலவும் கடும் போட்டி... இந்தியா கூட்டணி 25 இடங்களில் முன்னிலை...

மராட்டியத்தில் நிலவும் கடும் போட்டி… இந்தியா கூட்டணி 25 இடங்களில் முன்னிலை…

-

https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/postal-votes-to-be-counted-at-last-chief-electoral-officer/89603
கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து இயந்திரங்களில் பதிவான வாக்குகள் இந்தியா முழுவதும் எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பாலான தொகுதிகளில் பாஜக கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன. அதேசமயம், காங்கிரஸ் கட்சியும் பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றன. தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் முன்னிலையில் உள்ளன.
அந்த வகையில் மராட்டிய மாநிலத்தில் பாஜக மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 25 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மராட்டியத்தில் பாஜக கூட்டணி 17 இடங்களில் மட்டும் முன்னிலை வகிக்கிறது.

MUST READ