உணவு, உடை முதலீடு என எதை எடுத்தாலும், பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியர்கள் தான், தற்போது உலகளவில் உள்ள முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இளைய தலைமுறையினர் அதிகம் இருக்கும் நமது நாட்டில் சந்தை வாய்ப்பு அதிகமாக இருப்பது தான், முக்கிய காரணம்.
நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஆகஸ்ட் 8- ஆம் தேதி விவாதம்!
ரிலையன்ஸ் குழுமம் ஒரு துறையில் கால் பதிக்கிறது என்றால், சந்தையைப் பிடிக்க பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகப்படுத்துவது வழக்கம். உதாரணத்திற்கு தொலைத்தொடர்புத் துறையில் கால் பதித்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஏற்கனவே சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்த பல நிறுவனங்களைப் பின்னுக்கு தள்ளி, தற்போது சந்தையில் பாதியளவு ஆதிக்கம் செலுத்துகிறது.
தானே கிரேன் விபத்து – 17 பேர் உயிரிழப்பு
சந்தையைப் பிடிக்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அறிமுகச் சலுகையாக வாடிக்கையாளர்களுக்கு பல மாதங்களுக்கு கட்டணமில்லா சேவைகளை வழங்கியது நினைவிருக்கலாம். தற்போது, நிதிச் சந்தையில் நிகழ்ந்துள்ள ஜியோ பைனான்சியல் நடவடிக்கை சுமார் 40 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள இந்திய மியூச்சுவல் பண்ட் துறையில், அதிகம் செலுத்துமா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.