புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம் – ஆட்சியர் வல்லவன்
புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று புதுச்சேரி ஆட்சியர் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்கள் கட்டாய முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் புதுச்சேரி ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6000- ஐ தாண்டி இருக்கும் நிலையில் புதுச்சேரியில் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் கட்டாயம் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் ஒரே நாளில் 6,050 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 28,303 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் புதுச்சேரியில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சண்டே மார்க்கெட், கடற்கரை சாலை, வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், தியேட்டர்களில் உள்ளிட்ட இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.