பிரபல மாலில் பயங்கர தீவிபத்து- ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்தன
பிரபல மாலில் பயங்கர தீவிபத்து- ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்தன
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் தர்ஷி நகரில் உள்ள அபி ஷாப்பிங் மாலில் மின்கசிவு காரணமாக இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வாகனம் வருவதற்குள் தீ ஷாப்பிங் மால் முழுவதும் பரவியது.
இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் ஷாப்பிங் மாலில் இருந்த ஆடைகள் உள்ளிட்ட சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தது. தீவிபத்து குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.