Homeசெய்திகள்இந்தியாகூலி வேலைக்காக இடம்பெயர்ந்து அடிப்படை வசதி இல்லாமல் தவிப்பு

கூலி வேலைக்காக இடம்பெயர்ந்து அடிப்படை வசதி இல்லாமல் தவிப்பு

-

கூலி வேலைக்காக இடம்பெயர்ந்து அடிப்படை வசதி இல்லாமல் தவிப்பு
கர்நாடக மாநில மாண்டியாவில் கூலி வேலைக்காக இடம் பெயர்ந்து பல தலைமுறைகளாக வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழ் குடும்பத்தினர் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர்.

கூலி வேலைக்காக இடம்பெயர்ந்து அடிப்படை வசதி இல்லாமல் தவிப்பு

மாண்டியாவில் கட்டுமானம், சாலை அமைத்தல், கரும்பு வெட்டுதல் போன்ற பல்வேறு பணிகளுக்காக தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருந்து பல தலைமுறைகளுக்கு முன்பாக புலம் பெயர்ந்த தமிழ் குடும்பத்தினர் நகரின் மையப் பகுதியில் வசித்து வருகின்றனர்.

முழுமையாக தமிழர்கள் வசிக்கும் பகுதி என்பதால் இதற்கு தமிழர் காலனி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்குள்ள ஒரே ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டும் உள்ள தமிழ் மொழி பாடத்தை குழந்தைகள் கற்று வருகின்றனர்.

கூலி வேலைக்காக இடம்பெயர்ந்து அடிப்படை வசதி இல்லாமல் தவிப்பு

மேலும் நெருக்கமாக உள்ள குடியிருப்புகள் உள்ள இந்த பகுதியில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தமிழர்கள் தவித்து வருகின்றனர். குடியிருப்புகளுக்கு பட்டா இல்லாததால் இவர்களை அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகளும் நடந்து வருவதாகவும் தமிழர்கள் கூறுகின்றனர்.

ஒவ்வொரு தேர்தலின் போதும் குடியிருப்புகள் கட்டித் தருவதாகவும் அடிப்படை வசதிகள் செய்து தருவதாகவும் வாக்குறுதிகள் அழித்துவிட்டு பின்னர் அதை நிறைவேற்றுவதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

கூலி வேலைக்காக இடம்பெயர்ந்து அடிப்படை வசதி இல்லாமல் தவிப்பு

தற்போது நடக்கும் தேர்தலிலும் வேட்பாளர்கள் வாக்குறுதி அளித்திருக்கும் நிலையில் தங்களின் வாழ்வில் மாற்றம் வரும் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

MUST READ