
ககன்யான் திட்டத்தில் இன்று (அக்.21) நடக்கவிருந்த மாதிரி விண்கலம் சோதனையை ஒத்திவைத்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
பாலஸ்தீன அதிபர் உடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனையாக மாதிரி விண்கலம் TV- D1 ராக்கெட் மூலம் இன்று (அக்.21) காலை 08.00 மணிக்கு ஆந்திர மாநிலம், ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்படும் என்றும், மாதிரி விண்கலம் தரையில் இருந்து 16.6 கி.மீ. தூரம் வரை அனுப்பப்பட்டு வங்கக்கடலில் இறக்கப்படும் எனவும் இஸ்ரோ தெரிவித்திருந்தது.
அதுபோல், வெறும் 20 நிமிடத்தில் மாதிரி விண்கலம் அனுப்பும் சோதனை நிறைவுப் பெறும்; மாதிரி விண்கலம் 16.6 கி.மீ. தூரம் சென்றதும் விண்கலத்தில் வீரர்கள் அமரும் பகுதி தனியாகப் பிரிந்து விடும்; பாராசூட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் வங்கக்கடலில் பத்திரமாக இறக்கப்படும் எனவும் இஸ்ரோ அறிவித்திருந்தது.
சந்திரபாபு நாயுடுவை மீண்டும் கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை!
இந்த நிலையில், வானிலை காரணமாக, மாதிரி விண்கலம் ஏவுவதை காலை 08.00 மணியில் இருந்து காலை 08.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், விண்ணில் பாய்வதற்கான கவுண்ட்டவுன் 5 நொடி இருக்கும் போது, விண்கலம் ஏவுவது ஒத்திவைக்கப்படுவதாகவும், மற்றோரு நாளில் ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை நடைபெறும் என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார்.