சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நேற்று (மே 13) மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அதி தீவிர ‘மோகா’ புயலானது. வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (மே 14) காலை 08.30 மணியளவில் வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 850 கிலோ மீட்டர் வடக்கு- வடமேற்கே நிலைக்கொண்டுள்ளது.
விழுப்புரத்தில் அதிர்ச்சி! கள்ளச்சாராயம் குடித்த16 பேர் மருத்துவமனையில் – 3 பேர் உயிரிழப்பு
இது வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை அதி தீவிர புயலாகக் கடக்கக்கூடும். அந்த சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 180 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 210 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மே 14, மே 15 ஆகிய தேதிகளில் இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இன்று (மே 14) மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 130 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மாலை வரை காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாகக் குறையக்கூடும்.
கள்ளச்சாராயம் அருந்தி மூன்று பேர் உயிரிழப்பு- நிதியுதவியை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (மே 14) மாலை வரை சூறாவளிக் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்றின் வேகம் மணிக்கு 200 முதல் 210 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 230 கிலோ மீட்டர் வேகத்திலும் நண்பகல் வரை வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாகக் குறைந்து மணிக்கு 180 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 210 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாகக் குறையக்கூடும்.
ஆற்றில் குளிக்கச் சென்று மூழ்கிய வேத பாடச்சாலை மாணவர்கள்!
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ் கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்”. இவ்வாறு வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.