மோடி நிகழ்ச்சியை புறக்கணித்த முதலமைச்சர்
தெலங்கானா மாநிலத்திற்கு வந்த பிரதமர் மோடி நிகழ்ச்சியை நான்காவது முறையாக முதல்வர் சந்திரசேகர ராவ் புறக்கணித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பதி வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இன்று ஹைதராபாத் வந்தார். விமான நிலையத்தில் கவர்னர் தமிழிசை செந்தர்ராஜன், ஒன்றிய அமைச்சர் கிஷன்ரெட்டி, மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய், வரவேற்றனர். தெலங்கானா மாநில அரசு சார்பில் அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் வரவேற்றார்.
வந்தேபாரத் தொடங்கி வைத்து பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் புரோட்டோக்கால் அடிப்படையில் பிரதமருடன் முதல்வர் சந்திரசேகர் ராவ் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுருந்தது. ஆனால் பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வரும் சந்திரசேகர் ராவ் ஏற்கனவே மூன்று முறை தெலுங்கானா மாநிலத்திற்கு வந்த பிரதமர் மோடியை சந்திப்பதை புறக்கணித்தார். அதே போன்று இந்த முறையும் பிரதமரை வரவேற்கவும் நிகழ்ச்சியில் பங்கேற்பதையும் புறக்கணித்தார்.