Homeசெய்திகள்இந்தியாஇந்திய அணியினருக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்துகள் தெரிவித்த பிரதமர் மோடி!

இந்திய அணியினருக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்துகள் தெரிவித்த பிரதமர் மோடி!

-

டி20 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியினருக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்துகள் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். சிறப்பாக விளையாடிய விராட் கோலி 76 ரன்களிலும், அதிரடியாக விளையாடிய அக்‌ஷர் பட்டேல் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 176 ரன்கள் எடுத்தது. பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 169 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

இந்த நிலையில், டி20 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியின் வீர்ர்களுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்துகள் தெரிவித்தார். இதில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, மற்றும் ஆட்டநாயகன் விராட் கோலி ஆகியோருக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

MUST READ