Homeசெய்திகள்இந்தியாமோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு ...பதறிய அதிகாரிகள்

மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு …பதறிய அதிகாரிகள்

-

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுவிட்டு டெல்லி திரும்பும்போது பிரதமர் மோடியின் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு என தெரியவந்துள்ளது.

மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு ...பதறிய அதிகாரிகள்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுவிட்டு டெல்லி திரும்பும்போது அவரது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டுள்ளது.

பின்னர், டியோகர் விமான நிலையத்தில் அவரது விமானம் நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜார்க்கண்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மற்றும் இந்தியா பிளாக் கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

அந்த வகையில் நேற்று முன்தினம் நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் 43 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.  வரும் 20ஆம் தேதி 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.இந்த நிலையில், பழங்குடியினரின் அடையாளமான பிர்சா முண்டாவின் பிறந்தநாள் விழாவையொட்டி ஜார்க்கண்டில் இன்று நடைபெற்ற இரண்டு பேரணிகளில் பிரதமர் உரையாற்றினார்.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து… பயணிகள் அவதி!

MUST READ