Homeசெய்திகள்இந்தியாஎரிசக்தி மாநாட்டில் மோடி சூளுரை - உச்சத்தில் இந்தியா…!

எரிசக்தி மாநாட்டில் மோடி சூளுரை – உச்சத்தில் இந்தியா…!

-

சோலார், அணுசக்தி மற்றும் காற்றாலை உள்ளிட்ட மின் உற்பத்திகளில் கவனம் செலுத்தி, நிலையான எரிசக்தி வளத்தை உருவாக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

எரிசக்தி மாநாட்டில் மோடி சூளுரை - உச்சத்தில் இந்தியா…!லோக்சபா தேர்தலுக்குப் பிறகு சொந்த மாநிலமான குஜராத்திற்கு பிரதமர் மோடி முதல்முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, சோலார் மேற்கூரை திட்டத்தின் மூலம் பயணடைந்த பயனாளிகளுடன் 20 நிமிடம் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து, 4வது உலக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்களின் (RE INVEST) மாநாட்டின் தொடக்க விழாவிலும் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது:நமது இலக்கு என்பது உச்சத்துக்கு செல்வதல்ல, உச்சத்திலேயே இருப்பது தான் நமது இலக்கு. இப்போதைய 21ஆம் நூற்றாண்டில் இந்தியா தலைசிறந்த நாடாக திகழும் என்பது இந்தியர்களின் எண்ணம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக நாடுகளின் எண்ணமும் தான்.

நம்மிடம் எண்ணெய், எரிவாயு உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் வசதியில்லை. ஆகவே, சோலார், காற்றாலை, அணுசக்தி மற்றும் ஹைட்ரோ பவர் ஆகியவற்றில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளோம். இதன்மூலம், நிலையான எரிசக்தி வளம் உருவாக்கப்படும். 2030ம் ஆண்டுக்குள் 500 ஜிகா வாட் உற்பத்தி என்ற இலக்கை அடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

4வது உலக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்களின் மாநாடு, தொலைநோக்கு பார்வை கொண்டதாக இருக்கும். இதன்மூலம் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளினால் இந்தியா 2047ல் வளர்ந்த நாடாக மாறும். இந்த 3வது முறையான ஆட்சியின் முதல் 100 நாட்களில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பது மிகவும் முக்கியம். இந்த நாட்களில் பசுமை ஆற்றலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.

எரிவாயு நிதி திட்டத்தின் கீழ் ரூ.7,000 கோடி ஒதுக்க திட்டமிட்டுள்ளோம். அதேவேளையில், ரூ.31,000 மெகா வாட் ஹைட்ரோ பவரை உற்பத்தி செய்ய ரூ.12,000 கோடிக்கும் அதிகமாக ஒதுக்கி பணியாற்றி வருகிறோம், எனக் கூறினார்.

MUST READ