Homeசெய்திகள்இந்தியாகுரங்கு காய்ச்சலுக்கு இருவர் உயிரிழப்பு!

குரங்கு காய்ச்சலுக்கு இருவர் உயிரிழப்பு!

-

 

குரங்கு காய்ச்சலுக்கு இருவர் உயிரிழப்பு!

கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்தனர்.

உடல் முழுவதும் வெள்ளையாக வேண்டுமா….. இதை செய்து பாருங்க!

கர்நாடகா மாநிலம், ஷிவமோகா, உத்தரகன்னடா ஆகிய மாவட்டங்களில் குரங்கு காய்ச்சல் பரவி வருகிறது. நோய்த்தொற்று பாதிப்புக் கண்டறியப்பட்டுள்ள மாவட்டங்களில் 2,288 மாதிரிகள் சேகரிப்பட்ட நிலையில், 53 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

கடந்த ஜனவரி மாதம் 08- ஆம் தேதி அன்று ஷிவமோகா மாவட்டம், ஓசா நகரைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் குரங்கு காய்ச்சலால் உயிரிழந்தார். இந்த நிலையில், சிக்கமகளூரைச் சேர்ந்த 79 வயது முதியவர் குரங்கு காய்ச்சலுக்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நோய்த்தடுப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை கர்நாடகா மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அருமையான பாதாம் அல்வா செய்வது எப்படி?

வேகமாக பரவி வரும் குரங்கு காய்ச்சலால் கர்நாடகா மாநில மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

MUST READ