சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறக்கும் பணித் தொடங்கியது. நிலவின் தென்துருவப் பகுதியில் திட்டமிட்டப்படி மாலை 06.04 மணிக்கு லேண்டர் தரையிறங்கவுள்ளது. எட்டு கட்டங்களாக நிலவில் மென்மையாக லேண்டரைத் தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
“காவிரி நீர் வழக்கில் சட்டப் போராட்டம் நடத்துவோம்”- முதலமைச்சர் சித்தராமையா பேட்டி!
பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் 10,000 விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி, மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே லேண்டர் தரையிறங்கவுள்ளது.
மிசோரம் ரயில்வே பாலம் இடிந்து விபத்து- பிரதமர் நிவாரணம் அறிவிப்பு
தரையிறங்கும் பணித் தொடங்கியுள்ள நிலையில், விக்ரம் லேண்டரின் வேகம் 5,700 கி.மீ. குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.