சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் திட்டமிட்டப்படி இன்று (ஆகஸ்ட் 23) மாலை நிலவில் தரையிறங்குகிறது. நிலவில் லேண்டரைத் தரையிறக்கும் நடவடிக்கைகள் சரியான பாதையில் சென்றுக் கொண்டிருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார் அதிபர் ஜோ பைடன்!
நிலவில் தரையிறங்கவுள்ள சந்திரயான்- 3 விண்கலம் 10 கட்டங்களாகப் பயணித்து மாலை 06.04 மணிக்கு தரையிறங்குகிறது. நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் முதல் விண்கலம் என்ற பெருமையைப் பெறுகிறது இந்தியாவின் சந்திரயான்- 3. நிலவின் தென்துருவம் பற்றி ஆய்வுச் செய்ய இந்தியாவின் சந்திரயான்- 3 விண்கலம் ஜூலை 14- ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலை, மண்ணின் தன்மை உள்ளிட்டவைக் குறித்து சந்திரயான்- 3 ஆராய உள்ளது. மின்னூட்ட அதிர்வுகள், நிலநடுக்க அதிர்வுகள், தட்ப வெப்பநிலை குறித்தும் சந்திரயான்- 3 ஆய்வுச் செய்யும்.
நிலவை ஆராயும் சந்திரயான் திட்டத்தின் கீழ் சந்திரயான்- 3 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியது. சந்திரயான்- 3 திட்டம் வெற்றி பெற்றால் நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் நான்காவது நாடு இந்தியா ஆகும். ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகள் இதுவரை நிலவில் விண்கலத்தைத் தரையிறக்கியுள்ளன.
‘காவிரி நீர் தொடர்பான வழக்கை விசாரிக்க புதிய அமர்வு அறிவிப்பு!’
நிலவை ஆய்வுச் செய்வதற்காக கடந்த 2008- ஆம் ஆண்டு சந்திரயான்- 1, கடந்த 2019- ஆம் ஆண்டு சந்திரயான்- 2 விண்ணில் செலுத்தப்பட்டன. கடந்த 2008- ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திரயான்- 1 விண்கலம் நிலவில் உள்ள நீர் மூலக்கூறுகள் இருப்பதைக் கண்டறிந்தது. கடந்த 2019- ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திரயான்- 2 விண்கலம், நிலவில் தரையிறங்கும் போது, சேதமடைந்து பழுதானது.
சந்திரயான்- 2ல் லேண்டர், ரோவர் வேகமாக நிலவில் தரையிறங்கியதால் செயல்பட முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது.