“அவையில் பேச எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லஞ்சம் பெறுவது குற்றம்” என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வாழைத்தண்டு சட்னி செய்வது எப்படி?
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அவையில் உரை நிகழ்த்த லஞ்சம் வாங்கியதற்கு வழக்கு தொடுப்பதில் விலக்குக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஏழு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு இன்று (மார்ச் 03) காலை 11.00 மணிக்கு தீர்ப்பளித்துள்ளது.
அதில், “எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லஞ்சம் வாங்குவது நாடாளுமன்ற சிறப்பு உரிமைகளால் பாதுகாக்கப்பட்டதல்ல. வாக்களிக்க எம்.பி., எம்.எல்.ஏ. லஞ்சம் பெறுகிறார் எனில் அந்த இடத்திலேயே அவரது சட்ட பாதுகாப்பு நீங்கி விடுகிறது. நாடாளுமன்ற சலுகையைப் பயன்படுத்தி எம்.பி. லஞ்சம் வாங்கி சட்டப்பாதுகாப்பை பெறுவதை அனுமதிக்க முடியாது.
பல் சொத்தை ஏற்படுவதற்கான காரணங்களும் அதனை தடுக்கும் முறைகளும்!
அரசியல் சாசனத்தின் 105 (2), 194 (2) ஆகிய பிரிவுகள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கிறது. அவையில் பேச எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லஞ்சம் பெறுவது குற்றம்” என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.