ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் என்பது எல்லோரும் அறிந்ததே. அவர் தற்போது உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்திருக்கிறார்.
மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார் சோனியா காந்தி!
அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 9-வது இடத்தைப் பிடித்திருக்கிறார். 66 வயதான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 9.62 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. இதுவே கடந்த 2023- ஆம் ஆண்டில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 6.92 லட்சம் கோடி ரூபாயாக இருந்திருக்கிறது.
ஓராண்டில் அவரது சொத்து மதிப்பு சுமார் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்திருப்பது ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது. அடுத்ததாக, இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரரான் கவுதம் அதானி உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 17- வது இடத்தில் இருக்கிறார்.
“ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு”- தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பேட்டி!
அவரது சொத்து மதிப்பு 6.97 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் அதானியின் சொத்து மதிப்பு 3.91 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாக ஃபோர்ப்ஸ் பட்டியலில் தெரிய வந்துள்ளது. ஓராண்டில் அதானியின் சொத்து மதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.